தமிழக செய்திகள்

இந்தியா கூட்டணியில் முரண்பாடு -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தே.மு.தி.க. யாருடனும் தற்போது வரை கூட்டணியில் இல்லை. யாருடன் கூட்டணி என்ற இறுதி அறிவிப்பை தலைவர் (விஜயகாந்த்) தான் ஜனவரி மாதத்தில் அறிவிப்பார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் அளத்தங்கரையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

தே.மு.தி.க. யாருடனும் தற்போது வரை கூட்டணியில் இல்லை. யாருடன் கூட்டணி என்ற இறுதி அறிவிப்பை தலைவர் (விஜயகாந்த்) தான் ஜனவரி மாதத்தில் அறிவிப்பார். இந்தியா கூட்டணி கடைசி வரைக்கும் உறுதியான கூட்டணியா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதில் இருக்கின்ற அத்தனை மாநில முதல்-மந்திரிகளும் அடுத்த பிரதமர் நாங்கள் தான் என கூறி வருகிறார்கள். இந்தியா கூட்டணியில் முரண்பாடு உள்ளது. அந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். யாருமே நீட் தேர்வை பற்றி பேசவில்லை. உதயநிதி ஸ்டாலின் மட்டும் தான் அதைப் பற்றி பேசி வருகிறார். 50 லட்சம் கையெழுத்து என்று கூறுவது எல்லாமே கண்துடைப்பு தான். நீட் தேர்வு வராது என கூறிவிட்டு மாணவர்களை குழப்பத்தில் தள்ளிவிட்டு அவர்களை படிக்க விடாமல் செய்வது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான்.

கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தோல்வியடைந்த திட்டம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்