தமிழக செய்திகள்

நாகை நாகநாதர் கோவில் குடமுழுக்கு

நாகை நாகநாதர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகை நாகநாதர் கோவில் குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகநாதர் கோவில்

நாகையில் பிரசித்திப்பெற்ற அகிலாண்டேஸ்வரி அம்மன் உடனாகிய நாகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி அனுக்ஞை, மகா கணபதி யாகம், மகா லட்சுமி யாகம், நவக்கிரக யாகம், தன பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.

7-ந் தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. 8-ந் தேதி காலை 2-ம் கால யாகசால பூஜை, மாலை 3-ம் கால யாகசாலை பூஜை, 9-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜை, 5-ம் கால யாகசாலை பூஜை நடந்தது.

குடமுழுக்கு

நேற்று காலை 6-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதன் முடிவில் கோவில் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. மாலை 4 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவமும், பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்