தமிழக செய்திகள்

நடைபயிற்சியின்போது உரையாடல்: மு.க.ஸ்டாலினை மார்க்கண்டேயன் என வாழ்த்திய பெண்

நடைபயிற்சியின்போது உரையாடல்: மு.க.ஸ்டாலினை மார்க்கண்டேயன் என வாழ்த்திய பெண்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மூலம் தொடர்ந்து தனது உடல் நலத்தில் கவனம் செலுத்தி முன் உதாரணமாக இருந்து வருகிறார். அந்த வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டபோது பெண் ஒருவர் அவரை, எப்போதும் மார்க்கண்டேயனாகவே இருக்கிறீர்களே எப்படி? என்று கேட்டது வைரலாக பரவி வருகிறது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை அடையாறில் வழக்கம்போல் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த பொதுமக்களிடம் சகஜமாக பேசினார். அப்போது ஒரு பெண் முதல்-அமைச்சரிடம், கடந்த 2 வருடங்களுக்கு முன் விமானநிலையத்தில் நீங்கள் முதல்-அமைச்சராக வேண்டும் என வாழ்த்தினேன். எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கின்றீர்கள்; நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த ஆட்சி தொடர வேண்டும் சார் என்றார்.

இதையடுத்து கால்பந்து விளையாட சென்றிருக்கும் உங்களின் பேரன் வெற்றி பெற வேண்டும் என்று அருகில் இருக்கும் மற்றொரு பெண் கூறினார். அப்போது முதல் பெண், நீங்கள் எப்போதும் மார்க்கண்டேயனாகவே இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். இதை கேட்ட முதல்-அமைச்சர் மற்றும் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சியில் சிரிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த கேள்விக்கு, உடற்பயிற்சி செய்வதுதான் காரணம் என முதல்-அமைச்சர் பதில் அளிக்க அப்பெண் யூடியூப்பில் பார்த்துள்ளோம் என கூறினார். இந்த வீடியோ பதிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு