சென்னை,
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குள் நாள் 2 ஆயிரத்தை நெருங்கியே அதிகரித்து வருகிறது. சென்னையில் நேற்று வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 58,327 ஆக உள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றின் முக்கியத்துவத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் உதவி எண்கள் அடங்கிய சுவரொட்டி, சென்னையின், அனைத்து மண்டலங்களில் உள்ள வீடுகளின் முன்பும் ஒட்டுவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதில் மண்டல வாரியாக அவசரகால உதவி எண்கள் மற்றும் ரிப்பன் மாளிகையின் கட்டுப்பாட்டு அறை உதவி எண்களும் இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.