தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஒரே நாளில் நெல்லை-40, தென்காசி-8 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தின் நெல்லையில் ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதுவரை வைரஸ் பாதிப்புக்கு 71 பேர் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்து 108 பேர் தீவிர சிகிச்சை பெற்றும், 2,599 பேர் பாதிப்பில் இருந்து விடுபட்டு வீடு திரும்பியும் உள்ளனர்.

தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் நடந்து வந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 176 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோன்று தென்காசி மாவட்டத்திலும் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தென்காசியில் மொத்த பாதிப்பு 60 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 48 பேரையும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்து கண்காணித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்