தமிழக செய்திகள்

சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனா தொற்றால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்தே காணப்படுகிறது.

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 71,230 ஆக உள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 26 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 5 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேர், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேர் மற்றும் சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 4 பேர் என மொத்தம் 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு