தமிழக செய்திகள்

கர்நாடக, கேரளாவில் இருந்து நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் - கலெக்டர் அறிவிப்பு

கர்நாடக, கேரளாவில் இருந்து நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு 72 மணி நேரத்துக்குள் எடுத்த கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் என்று கலெக்டர் அறிவித்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இ-பதிவு சீட்டுடன் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் 2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

அந்த சான்றிதழ்கள் இல்லையெனில் நீலகிரிக்கு வர அனுமதிக்கப்படமாட்டாது. மேலும் சோதனைச்சாவடிகளில் சுற்றுலா பயணிகளின் உடல் வெப்பநிலை மற்றும் சுய முகவரி சரிபார்ப்புக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். இல்லையெனில் அபராதம் விதிக்கப்பட்டு நீலகிரிக்கு வர அனுமதி மறுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு