தமிழக செய்திகள்

தமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா; பலி எண்ணிக்கை 1,025 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,025 ஆக இன்று உயர்ந்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிர்ச்சியளிக்கும் வகையில், நேற்று ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்திருந்தது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து சென்றிருந்தனர். தமிழகத்தில் கொரோனா வைரசுக்கு நேற்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 957 ஆக உயர்ந்திருந்தது.

இதனால் தொடர்ந்து 2வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு கூடுதலாக சென்றது. தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

கடந்த 17ந்தேதி, 2,174 என்ற எண்ணிக்கையில் இருந்த பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து, கடந்த 24ந்தேதி 2,866 ஆக உயர்ந்திருந்தது. தொடர்ந்து 8 நாட்களாக 2 ஆயிரத்திற்கு மேல் பாதிப்பு எண்ணிக்கை இருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக புதிய உச்சம் அடைந்து 3,500க்கு மேல் சென்றுள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 1,025 ஆக இன்று உயர்ந்து உள்ளது. இதுபற்றி தமிழக சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்ந்து 3வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 500க்கு கூடுதலாக சென்றுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு