தமிழக செய்திகள்

குடிசை வீட்டில் தீ விபத்து

நாட்டறம்பள்ளி அருகே குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர்குப்பம் குட்டகொல்லி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பீமராஜன். இவரது மகன் மணி (வயது 48). விவசாயம் செய்து வருகிறார். இவரது குடிசை வீட்டில் நேற்று மாலை 7 மணியளவில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே வீட்டில் இருந்த அனைவரும் வெளியே ஓடிவிட்டனர்.

இதுகுறித்து உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். அதற்குள் வீடு முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் வீட்டில் இருந்த துணி மணிகள், கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்