ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில நாட்களில் 15 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி தெற்கு கோட்டையூர் அருகே தரிசு நிலத்தில் நேற்று டிராக்டர் ஏறியதால் நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையிலான குழு அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்தில் 6 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். இந்த நாட்டு வெடிகுண்டுகள் பொதுமக்கள் நடமாடும் இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுப்பு விவகாரம் தொடர்பாக மாரிச்சாமி, அழகர்சாமி, முருகன், முத்தையா ஆகிய 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வத்திராயிருப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.