கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

சுங்கத்துறை அதிகாரி எடுத்த விபரீதமுடிவு: காதல் தோல்வி காரணமா..?

சுங்கத்துறை அதிகாரி அண்ணா நகரில் உள்ள மத்திய அரசு குடியிருப்பில் தங்கி இருந்தார்.

திருமங்கலம்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் சங்கனெர் சாலையைச் சேர்ந்தவர் குஷாஹல் சதுர்வேதி (வயது 25). இவர், 2020-ம் ஆண்டு சுங்கத்துறையில் பணிக்கு சேர்ந்தார். தற்போது சென்னை எண்ணூர் துறைமுகத்தில் சுங்கத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இன்னும் திருமணம் ஆகாத இவர், மத்திய அரசு பணியில் பணிபுரியும் தனது நண்பரும், மற்றொரு சுங்கத்துறை அதிகாரியுமான புஷ்பன்ட்ரா (35) என்பவருக்கு ஒதுக்கப்பட்ட அண்ணா நகரில் உள்ள மத்திய அரசு குடியிருப்பில் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் வேலைக்கு சென்று திரும்பிய புஷ்பன்ட்ரா, வீட்டின் கதவு உள்புறமாக பூட்டி இருந்ததால் நீண்டநேரம் தட்டினார். ஆனால் குஷாஹல் சதுர்வேதி கதவை திக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த புஷ்பன்ட்ரா, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது குஷாஹல் சதுர்வேதி படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுங்கத்துறை இளம் அதிகாரி காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா?அல்லது வேறு ஏதும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு