தமிழக செய்திகள்

நிவாரணப்பணிகள் நடப்பதால் திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கஜா புயல் நிவாரணப்பணிகள் நடைபெறுவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.

சுழன்று அடித்த புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும், 40 ஆயிரம் மின் கம்பங்களும் சாய்ந்தன. மேலும் சுமார் 350 மின்மாற்றிகளும் சேதம் அடைந்து உள்ளன. இதுதவிர 1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்து இருக் கின்றன. புயல் சேதத்தை மதிப்பிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் மறு சீரமைப்பு மற்றும் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்காரணமாக சில மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

*புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

*நாகை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட இடங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

*திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

*தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டை, ஒரத்த நாடு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

*கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

*அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்புக்கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு .

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெறும்.

*பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்