தமிழக செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவாரூர்,

கஜா புயலின் தாக்கத்தினால் 6 மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புயல், மழை காரணமாக பள்ளிகளும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. பள்ளிகளை சீர்செய்யும் பணிகளுக்கு உதவி செய்ய ஆசிரியர்களுக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவியை செய்துக் கொடுப்பதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்