தமிழக செய்திகள்

கொரோனாவால் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொரோனா தொற்று காரணமாக ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்,

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அங்கு தற்போது 338 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அசோக் நகர் மற்றும் நாராயணன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து சீல் வைத்தனர்.

இதே போல் நிலக்கோட்டை அருகே உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில் கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டதையடுத்து, அந்த கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு