தமிழக செய்திகள்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தில் அரசின் வரவு-செலவு, அரசு ஊழியர்களின் விவரங்களை கணினிமயமாக்கல் செய்வது என்ற பெயரில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்த திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் தாஜுதீன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்