சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் உள்ள வாக்குச்சாவடியின் விவரங்களை http://election.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால், வாக்காளர் பெயர், உள்ளாட்சி அமைப்பு, வார்டு எண், தெருவின் பெயர், வாக்குச்சாவடி விவரம் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.