தமிழக செய்திகள்

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சார்பில் பக்தர்கள் கஞ்சி கலய ஊர்வலம்

தினத்தந்தி

குன்னூர்

குன்னூர் ரேலி காம்பவுண்ட் பகுதியில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் செயல்பட்டு வருகிறது. மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாத கடைசியில் கஞ்சி கலய ஊர்வலம் நடத்தப்படும். இந்த ஆண்டு 26 -வது கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது. குன்னூர் தந்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் தந்தி மாரியம்மன் கோவிலிலிருந்து கஞ்சி கலய ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்திற்கு மன்ற தலைவி பிரபாவதி மோகன் தலைமை தாங்கினார். கோவிலில் இருந்து 287 பேர் கஞ்சி கலயம் சுமந்து ஊர்வலமாக மவுண்ட் ரோடு, பஸ் நிலையம், உழவர் சந்தை சாலை வழியாக வார வழிபாட்டு மன்றத்தை அடைந்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரியை சேர்ந்த ஏராளமானோர் நிகலந்து கொண்டனர். 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது