தமிழக செய்திகள்

மொபட் மீது கார் மோதி விவசாயி பலி

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் கனகசபாபதி (வயது 72). வக்கீல். இவர் கடந்த 11-ந் தேதி தனது மொபட்டில் அதே பகுதியை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் (70) என்பவருடன் பரமத்தி நோக்கி சென்று கொண்டிருந்தார். மொபட்டை கனகசபாபதி ஓட்டினார். பன்னீர்செல்வம் பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது பரமத்தி அருகே மறவாபாளையம் பிரிவு சாலை அருகே சென்றபோது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி வேகமாக வந்த கார் ஒன்று கனகசபாபதி ஓட்டிவந்த மொபட் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கனகசபாபதி, பன்னீர்செல்வம் ஆகியோர் கீழே விழுந்தனர். இதில் கனகசபாபதிக்கு லேசான காயமும், பன்னீர்செல்வத்துக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்