தமிழக செய்திகள்

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலைத்திருவிழா

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலைத்திருவிழா நடந்தது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டி நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக வட்டார அளவில் கலைத்திருவிழா நடத்தப்பட்டது. அதன்படி சேலத்தில், வட்டார அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் 1 லட்சத்து 50 ஆயிரத்து 791 பேர் கலந்து கொண்டனர். இதில் முதல் 3 இடங்களை பெற்ற 39 ஆயிரத்து 780 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. அதன்படி மரவனேரியில் உள்ள செயின்ட் பால் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழாவ வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் மேயர் ராமச்சந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர், பள்ளி முதல்வர் அலெக்ஸ் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்