தமிழக செய்திகள்

கரூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

கரூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் 300 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

செஸ் போட்டி

கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8,10,13,20 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. போட்டிகள் 4 பிரிவுகளாக தனித்தனியாக நடைபெற்றது. போட்டியை தலைமை நடுவர் சிவராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பரிசுகள்

பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சதுரங்க கழக தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து, துணைத்தலைவர் செல்வராஜ் ஆகியோர் பரிசு மற்றும் கோப்பை வழங்கினர்.

மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் செய்திருந்தார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு