தமிழக செய்திகள்

திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து

திமுக - கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தினத்தந்தி

சென்னை,

திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதையடுத்து எந்தெந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது என்பதை முடிவு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுகவினர் 2 கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துள்ளனர். நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 5 தொகுதிகளை கேட்டதாகவும், திமுக 3 தொகுதிகளை கொடுக்க முன்வந்ததாகவும், இதன் காரணமாக தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்று நடைபெற்ற 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்படி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் கையெழுத்திட்டனர். மேலும் தொகுதி பங்கீடு குறித்த பட்டியல் நாளை வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது