தமிழக செய்திகள்

தி.மு.க. பொதுக்கூட்டம்

திருச்சிற்றம்பலத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம்

திருச்சிற்றம்பலம்:

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சிற்றம்பலம் கடைவீதியில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பேராவூரணி ஒன்றிய அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பேராவூரணி வடக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் வரவேற்றார். தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆடுதுறை உத்திராபதி கலந்து கொண்டு பேசினார். தஞ்சை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுபசேகர், பேராவூரணி பேரூர் செயலாளர் சேகர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆரோ அருள், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் மணிவண்ணன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராஜாங்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் செருவை.பன்னீர்செல்வம், டாக்டர் சந்திரசேகர், வாட்டாத்திக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி பன்னீர்செல்வம், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் திருமேனி நன்றி கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்