சென்னை,
திமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு துவங்கியது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து சுமார் 3,500 பேர் பங்கேற்கின்றனர். பொதுக்குழுவில் மாவட்டச் செயலாளா தலைமையில் அந்தந்த மாவட்டத்தின் ஒன்றிய, நகர, பொதுக்குழு உறுப்பினாகள் பங்கேற்றுள்ளனர்.
பொதுச் செயலாளா பதவிக்கு துரைமுருகன், பொருளாளா பதவிக்கு டி.ஆா.பாலு ஆகியோ மட்டுமே மனு அளித்தனா. இதனால், இருவரும் போட்டியின்றி ஒருமனதாகத் தேந்தெடுக்கப்பட்டனர். பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட துரைமுருகனுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல், பொருளாளராக தேர்வான டி ஆர் பாலுவுக்கும் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.