தமிழக செய்திகள்

"அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அஞ்சாது" - அமைச்சர் ரகுபதி பதிலடி

அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அஞ்சாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்து வருவதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அஞ்சாது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது, 'மத்தியில் ஆட்சி அதிகாரம் பாஜக கையில் உள்ளதால் தமிழகத்தில் எங்கேயாவது சட்ட ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கிவிட முடியுமா என்று அவர்கள் தப்புக்கணக்கு போடுகிறார்கள். அவர்களுடைய கணக்கு எந்த காலத்திலும் நிறைவேறாது. அவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது அது பகல் கனவாகவே போகிவிடும்' என்று கூறினார்.

மேலும், அண்ணாமலை இரண்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறியதற்கு, எங்களுக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்று கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு