தமிழக செய்திகள்

வரும் 16-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம்

வரும் 16-ம் தேதி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப்.18 முதல் 22 வரை கூடுவதை ஒட்டி, சிறப்பு கூட்டத்தொடரை எதிர்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு