தமிழக செய்திகள்

"பிரதமரின் நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும்" - ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் உறுதி

சீன எல்லை பிரச்சினையில் மத்திய அரசுக்கு திமுக துணை நிற்கும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுடெல்லி,

பிரதமர் கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க பிரதமர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திமுக துணை நிற்கும் என்றார். நாட்டுக்காக போர் வீரர்கள் செய்த தியாகம் ஒருபோதும் வீணாகாது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் எல்லையை பாதுகாத்திட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடம் இல்லை என்றும் அவர் உறுதி அளித்தார். சீனப் போர் , பாகிஸ்தான் போர் மற்றும் கார்கில் போரில் திமுக எப்போதும் அரசின் பக்கம் நின்று இருக்கிறது என்று நினைவு கூர்ந்தார்.

இந்தியா அமைதியை விரும்புகிறது தேவைப்பட்டால் தக்க பதிலடி கொடுக்க மாட்டோம் என பிரதமர் கூறியதை ஸ்டாலின் வரவேற்றார்., போர் குரல் ஒலிக்கும் போது பின்வாங்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்