தமிழக செய்திகள்

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற திமுக மகளிரணியினர் கைது: மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற திமுக மகளிரணியினர் கைது செய்யப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

உத்தரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் பெண்ணுக்காக நீதிக்கேட்டு இன்று கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் கையில் ஒளியேந்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். போலீசாரின் தடையை மீறி பேரணி சென்றதாக திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற திமுக மகளிரணியினர் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், அராஜகத்தைக் கண்டித்து திமுக மகளிரணி நடத்திய ஒளி ஏந்திய பேரணியை தடுத்து, கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை.

உ.பி.கொடூரத்துக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல இது! தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி தான் நடக்கிறதா?

அதிமுக அரசு தனது அராஜக குணத்தை கைவிட வேண்டும்! என்று பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு