சென்னை,
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்ரவரி 1-ம் தேதி அரசுக்கு விளக்கி உள்ளதாக கவர்னர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிற்கு மாறாக உள்ளதாக கவர்னர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு பெறுவது என்பது சட்டப் பிரச்சினை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நீட் தேர்வு விலக்கு பெறுவது என்பது சட்டப் பிரச்சினை. சட்டம் மூலமாகத்தான் இதற்கு தீர்வு காண முடியும். அதிமுக அரசு கையாண்ட விதத்தில்தான், திமுக அரசு நீட் விவகாரத்தை கையாண்டு வருகிறது. நீட் விலக்கு விவகாரத்தில் திமுகவின் இயலாமைதான் வெளிப்பட்டுள்ளது.