தமிழக செய்திகள்

வேளாண் சட்டங்களை செயல்படுத்த கூடாது - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

வேளாண் சட்டங்களை செயல்படுத்த கூடாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

வேளாண் சட்டங்களை செயல்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள கருத்துகளை மத்திய அரசு கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய இடையீடு அரசியலமைப்பின் நடைமுறைகளின்படி மத்திய அரசு தனது கடமைகளை சரிவர ஆற்றி வரவில்லை என்பதையே காட்டுகிறது. பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்டுள்ள அறிவுரைகளை கருத்தில் கொண்டும், லட்சக்கணக்கான விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்கள் அரசியல் கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு செவிசாய்த்து வேளாண் சட்டங்களை செயல்படுத்துவதை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு