தமிழக செய்திகள்

தியாகதுருகத்தில் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

தியாகதுருகத்தில் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தியாகதுருகம், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ராஜாராம் மகன் கார்த்திகேயன் (வயது 38). இவர் இதே பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முடநீக்கியல் டாக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி நந்தினி(33). இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். கார்த்திகேயனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திகேயன் தனது மனைவி நந்தினியிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் கடைக்கு சென்று விட்டு வந்து தருவதாக கூறிவிட்டு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன், வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார்.

தற்கொலை

பின்னர் சிறிது நேரத்தில் கடைக்கு சென்ற நந்தினி வீட்டிற்கு வந்தார். அப்போது அறையில் கார்த்திகேயன் தூக்கில் தொங்குவதை பார்த்த அவர் சத்தம் போட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்திகேயன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின்பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு