தமிழக செய்திகள்

‘டாக்டர் அம்பேத்கர் விருது’ பரிசுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்வு

டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கடந்த 1995 ஆம் ஆண்டில் இருந்து திருவள்ளுவர் தினத்தன்று, தமிழக அரசு சார்பில் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உழைப்பவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழக அரசு இந்த விருதினை வழங்கி வருகிறது.

இந்த விருதுக்கான பரிசுத்தொகை ஒரு லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு முதல் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத்தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது