தமிழக செய்திகள்

மானாமதுரையில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி

மானாமதுரையில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்

தினத்தந்தி

மானாமதுரை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கழிவுநீர் கால்வாய்களை ரூ.10 லட்சம் செலவில் முழுமையாக தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகளை நகர்மன்ற தலைவா மாரியப்பன் கென்னடி தொடங்கி வைத்தார். அனைத்து வார்டுகளிலும் கழிவுநீர் தடையின்றி செல்லும் வகையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது. இதே போல் வார்டு பகுதிகளில் கொசுபுகை மருந்து அடிக்கும் பணிகளையும் நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நோட்டீசுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் பாண்டி செல்வம், நகர செயலாளர் பொன்னுச்சாமி, நகராட்சி கவுன்சிலர்கள் அழகர்சாமி, ராஜேஸ்வரி, எஸ்ஸார்நெட் வித்யாபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு