தமிழக செய்திகள்

பள்ளிகளில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பள்ளிகளில் சாதி பாகுபாடு குறித்து விசாரணைக்குழுவின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் கம்மியம்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்ற மாநில அறிவியல் கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் 38 மாவட்டங்களில் இருந்து 500 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிகளில் சாதி பாகுபாடு குறித்து விசாரணை நடத்த முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பள்ளிகளில் ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடங்கும்போதும், முதல் வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை மூலமாகவும், உள்ளூர் காவல்துறை மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் மூலமாகவும் மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்