தமிழக செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

'தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும். ஏனைய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு பொதுவாக வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரை வீசக்கூடும், இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்'.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு