தமிழக செய்திகள்

வரத்து குறைந்ததால் வாழை விலை அதிகரிப்பு

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் வரத்து குறைந்ததால் வாழை விலை அதிகரித்துள்ளது

தினத்தந்தி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு பாசனத்தின் மூலம் நெல், கரும்புக்கு அடுத்தபடியாக வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கடைமடை பகுதியான உப்புக்கோட்டை, பாலார்பட்டி, கூழையனூர், குண்டல்நாயக்கன் பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி ஆகிய பகுதிகளில் கற்பூரவல்லி, நாலிபூவன், நாட்டுவாழை, ரஸ்தாலி, திசு வாழை போன்றவை 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

போதிய தண்ணீர் மற்றும் நோய் தாக்குதல் குறைந்ததால் வாழை நன்கு விளைச்சல் அடைந்துள்ளது. இதற்கிடையே வரத்து குறைந்ததால் அதன் விலை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த வாரம் கிலோ ரூ.20-க்கு விற்பனையான திசு வாழை தற்போது கிலோ ரூ.30-க்கு விற்பனை ஆகிறது. நாலிபூவன் ரூ.25 முதல் ரூ.40 வரையிலும், செவ்வாழை ரூ.35 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு