தமிழக செய்திகள்

தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

தொடக்கப்பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், பகலில் மக்கள் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் இளநீர், தர்பூசணி பழக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இதனால் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வெயிலின் காரணமாக 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறஉள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு