தமிழக செய்திகள்

துரோகத்தின் முழு உருவமே எடப்பாடி பழனிசாமி தான் - கோவை செல்வராஜ்

துரோகத்தின் முழு உருவமே எடப்பாடி பழனிசாமி தான் என்று கோவை செல்வராஜ் கூறினார்.

தேனி,

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலியாக ஓ.பன்னீர்செல்வத்தை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு மற்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

அதன்படி நேற்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளரான கோவை மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து மற்றும் ஆதரவு தெரிவித்தனர்.

அதன் பின்னர் கோவை செல்வராஜ் நிருபர்களிடம் கூறுகையில்,

எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்றி கம்பெனி நடத்த முயற்சிக்கிறார். ஒரு வாரத்திற்குள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருக்கும் நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சேர்ந்து விடுவார்கள். துரோகத்தின் முழு உருவமே எடப்பாடி பழனிசாமி தான்.

கட்சியையும், தொண்டர்களையும் காப்பாற்ற ஓ.பன்னீர்செல்வம் புலியாக மாறி தாக்குவார். கட்சியில் உள்ள சண்டை, குழப்பத்திற்கு காரணம் ஜெயக்குமார் தான். எனவே ஜெயக்குமார் போன்ற ஆட்கள் இனிமேல் கட்சியில் தலை தூக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்