தமிழக செய்திகள்

முருகனுக்கு 6 நாள் பரோல் வழங்கக்கோரிய நளினி மனு நிராகரிப்பு

வேலூரில் ஜெயிலில் உள்ள முருகனுக்கு 6 நாள் பரோல் வழங்கக்கோரிய நளினியின் மனு நிராகரிக்கப்பட்டது.

தினத்தந்தி

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் பரோலில் வெளியே வந்து காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ளார்.

இந்தநிலையில் முருகனுக்கு 6 நாட்கள் அவசர விடுப்பு வழங்க வேண்டும் என நளினியும், அவரது தாயார் பத்மாவும் சிறைத்துறை நிர்வாகத்துக்கு மனு அளித்திருந்தனர்.

அந்த மனுக்களை பரிசீலனை செய்த சிறைத்துறை சூப்பிரண்டு அப்துல்ரகுமான், முருகன் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி, அவர் விடுப்புக்கு தகுதி பெறவில்லை என்று கூறி நளினியின் மனுவை நிராகரித்துள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு