தமிழக செய்திகள்

புதுச்சத்திரம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

புதுச்சத்திரம் அடுத்த அக்ரஹாரம் அருகே உள்ள லக்கபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60). இவர் கடந்த சில நாட்களாக கால் வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனிடையே கடந்த 21-ந் தேதி, மதுவில் விஷம் கலந்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த அவரது உறவினர்கள் ராமசாமியை மீட்டு ஏளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்