தமிழக செய்திகள்

கீரிப்பாறை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை

கீரிப்பாறை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

அழகியபாண்டியபுரம்,:

தடிக்காரன்கோணத்தை அடுத்த பால்குளம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 60), தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் இருந்து அந்தோணியை காணவில்லை. இதுகுறித்து அவருடைய மனைவி கீரிப்பாறை போலீசில் புகார் கொடுத்தார். நேற்று காலையில் அவரை தேடும் பணி நடந்தது. அப்போது கொட்டம்பாறை பகுதியில் அந்தோணி விஷம் குடித்து இறந்து கிடந்தார்.

பின்னர் கீரிப்பாறை போலீசார் அந்தோணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். விஷம் குடித்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்