தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

கொள்ளிடம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் சதீஷ் (வயது 28). எலக்ட்ரீசியன். இந்த நிலையில் சம்பவத்தன்று சதீஷ் தனது பெரியப்பா நாராயணன் என்பவரது வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்ததால், அவரது வீட்டிற்கு சென்று மின் வயரை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சதீஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் வீட்டிற்குள்லேயே சுருண்டு விழுந்து இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சதீஷ் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சதீசுக்கு மனுஷா (23) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்