தமிழக செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் பேசும்போது மின்சாரம் துண்டிப்பு- 2 பேர் பணியிடமாற்றம்

அமைச்சர் துரைமுருகன் பேசிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் 2 பேர் பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்

தினத்தந்தி

காட்பாடி,

காட்பாடியில் தான் படித்த மேல்நிலைப்பள்ளியில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், அமைச்சர் துரைமுருகன் கடுப்பாகி பேச்சை முடித்துக் கொண்டார். அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 70 ஆண்டுகளுக்கு முன்பு தான் படித்த பள்ளி என்பதால், மலரும் நினைவுகளை பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீண்ட நேரம் நின்றுக்கொண்டு காத்திருந்தார். மின் இணைப்பு வராததால் கடுப்பான அமைச்சர், இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். பின்னர், அவசர அவசரமாக மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிவிட்டு சென்றார்.

இந்த நிலையில் அமைச்சர் துரைமுருகன் பேசிய போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் 2 பேர் பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்.காட்பாடி தாராபடவேடு பகுதி துணை மின்நிலைய உதவி பொறியாளர்கள் சிவகுமார் ,கருணாநிதி பணியிடமாற்றம் செய்யப்ட்டுள்ளனர்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை