தமிழக செய்திகள்

செஞ்சி அருகேபோலி டாக்டர் கைது

செஞ்சி அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

செஞ்சி, 

செஞ்சி அருகே மேலச்சேரி பகுதியில் ஒருவர் மருந்தகம் வைத்துக்கொண்டு, மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வருவதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில், விழுப்புரம் மாவட்ட குடிமை மருத்துவர் லதா மற்றும் டாக்டர்கள் பாலகோபால், முகேஷ், கலைமணி ஆகியோர் அடங்கிய குழுவினர் மேலச்சேரி சென்று அங்குள்ள மந்தகத்தில் ஆய்வு செய்தனர்.அப்போது அங்கிருந்த அதேபகுதியை சேர்ந்த மாதவன் மகன் மனோகரன் (வயது 51) என்பவர், மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மனோகரனை செஞ்சி போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர் ஆங்கில மருத்துவம் செய்ய பயன்படுத்திய மருந்து பொருட்களையும் கைப்பற்றினர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு