தமிழக செய்திகள்

நடுவீரப்பட்டில் போலி டாக்டர் கைது

நடுவீரப்பட்டில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

நடுவீரப்பட்டு,

நடுவீரப்பட்டு பகுதியில் முறையான மருத்துவம் படிக்காத ஒருவர், வீடு வீடாக சென்று சிகிச்சை அளித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் நடுவீரப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் ஆகியோர் அதே பகுதியில் உள்ள கிருபாநிதி(வயது 51) என்பவான் வீட்டுக்கு சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் எந்தவித அனுமதியும் இல்லாமல் ஊசி, மருந்து, மாத்திரை மற்றும் மருத்துவ உபகரணங்கள் வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கைது

இதையடுத்து கிருபாநிதியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அதே பகுதியை சோந்த டாக்டர் ஒருவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்ததும், பின்னர் உதவியாளர் வேலையை விட்டு விட்டு கடந்த 3 ஆண்டுகளாக தனது சொந்த வீட்டில் வைத்தும், வீடு வீடாக சென்றும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் தொயவந்தது.

இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாநிதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை