தமிழக செய்திகள்

தவறி விழுந்த தொழிலாளி சாவு

மாடியில் கொட்டகை அமைத்தபோது தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

உப்புக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது40). கூலித்தொழிலாளி. நேற்று இவர், உப்புக்கோட்டையில் உள்ள செல்லபாண்டி என்பவரது வீட்டின் மாடியில் தகரத்தால் கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் மாடியில் தவறி கீழே விழுந்தார்.

படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே கண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவருடைய மனைவி புவனேஷ்வரி, கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்