தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி

மின்சாரம் தாக்கி தந்தை-மகன் உயிரிழந்தனர்.

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமர்(வயது 55). இவரது மனைவி பெரியம்மாள் நேற்று முன்தினம் இரவு துணிகளை துவைத்து அவற்றை வீட்டின் அருகே இரும்பு கம்பியாலான கொடியில் காய வைப்பதற்காக போட்டுக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு அவரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது கணவர் ராமர், மகன் மணிகண்டன்(30) ஆகியோர் பெரியம்மாளை காப்பாற்ற முயன்றனர்.

தந்தை, மகன் பலி

அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியது. இதில் படுகாயமடைந்த ராமர், மணிகண்டன் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். பெரியம்மாள் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இரும்பு கம்பியில் மின் கசிவு எவ்வாறு ஏற்பட்டது என உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு