தமிழக செய்திகள்

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் தீ விபத்து

தியாகராய நகர் உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை தியாகராய நகரில் உள்ள உஸ்மான் சாலையில் பிரபல தனியார் துணிக்கடையில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்குள்ளான துணிக்கடையின் மேல்தளத்தில் தங்கியிருந்த ஊழியர்கள் 11 பேரை தீ அணைப்பு படை வீரர்கள் மீட்டுள்ளனர். 4 மணி நேர பேராட்டத்திற்குப்பின், கிரேன் மூலம் தீயணைப்புத்துறையினர் பத்திரமாக ஊழியர்களை மீட்டனர்.

கடையின் 7 வது மாடி வரை பரவியுள்ள புகையை ரசாயன கலவை மூலம் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் கூறுகின்றன. தீ விபத்தை தெடர்ந்து, உஸ்மான் சாலையில் பேக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு