தமிழக செய்திகள்

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை -தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகையை தீயணைப்பு வீரர்கள் நடத்தினர்.

தினத்தந்தி

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகள் மற்றும் டாக்டர்கள், ஊழியர்கள் தீ விபத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது எப்படி? என்பது தொடர்பாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

வடசென்னை மாவட்ட அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், ஸ்டான்லி ஆஸ்பத்திரியின் 4-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டு அதிலிருந்து டாக்டர்கள் மற்றும் நோயாளிகளை ராட்சத 'ஸ்கை லிப்ட்' மூலம் மீட்பது மற்றும் தீயை அணைப்பது குறித்தும் செய்து காட்டினா.

அதேபோல் தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகள், உதவியாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது, ஆஸ்பத்திரியின் பிற பகுதிக்கு தீ பரவாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு வகையான மீட்பு முறைகள் மற்றும் தீயணைப்பான் கருவிகளை கையாளுதல் குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பெற்றனர். தீயணைப்பு மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர்கள், உதவி மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது