தமிழக செய்திகள்

முதல்-அமைச்சரின் துபாய் பயணம் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில்

முதல்-அமைச்சரின் துபாய் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் செல்லவில்லை; தனிப்பட்ட காரணங்களுக்காகவே துபாய் சென்றுள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், துபாய் பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

துபாய் பயண நேரத்தில், விமானம் இல்லா சூழலால் தனி விமானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். அதற்கான செலவை திமுகவே ஏற்றுக்கொண்டிருக்கிறது. தனி விமானத்தின் செலவு அரசு உடையது அல்ல, திமுகவின் செலவு தான்.

முதல்-அமைச்சரின் துபாய் பயணம் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணம் மட்டுமல்ல, அயலக தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கான பயணம் ஆகும். உலக கண்காட்சி நிறைவுபெற சிறிது நாட்கள் இருக்கும் போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது சட்டம்-ஒழுங்கு எப்படி இருந்தது என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு