தமிழக செய்திகள்

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கியது.

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஆண்டுதோறும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்தநிலையில், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரிகளை தேர்வு செய்தவர்களுக்கு நேற்று முன்தினம் முதல் வகுப்புகள் தொடங்கின. அந்த வகையில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கின. இதில், மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கல்லூரிக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு முதல் நாளில் கல்லூரி தொடர்பாகவும், பாடங்கள் தொடர்பாகவும் விளக்கி கூறப்பட்டன. இதேபோல் விடுதியில் தங்கி படிப்பவர்கள், விடுதியில் சேர்ந்தனர். அடுத்ததாக மருத்துவ மாணவர்களுக்கான சீருடையில் வகுப்புகள் தொடங்கும் என கல்லூரி வட்டாரத்தில் தெரிவித்தனர்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு